டாப் 10 நியூஸ் : கோவை செல்லும் உதயநிதி முதல் சென்னை – மும்பை மோதல் வரை!

Published On:

| By christopher

top 10 news today march 23

கோவை செல்கிறார் உதயநிதி

பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 23) கோவை செல்ல உள்ளதால், மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். top 10 news today march 23

தேனி புத்தக திருவிழா! top 10 news today march 23

தேனி கம்பம் ரோடு பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள மேனகா மில் மைதானத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா இன்று துவங்கி மார்ச் 30 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது.

ரமலான் சிறப்பு ரயில்கள்!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. இதன் முன்பதிவு இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் ஆகிறார் போப் பிரான்சிஸ்

நிமோனியா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாடிகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 88 வயதான போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஸ் செய்யப்பட உள்ளார்.

தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா!

திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, இன்று விக்னேஸ்வரர் உற்சவத்துடன் துவங்கி ஏப்ரல் 3 வரை 12 நாட்கள் நடக்கிறது.

ஐதராபாத்துடன் ராஜஸ்தான் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 2வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களம் இறங்குகின்றன.

சென்னையை சந்திக்கும் மும்பை

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடரில் தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

அனிருத் இசைக் கச்சேரி! top 10 news today march 23

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள சென்னை – மும்பை அணிகள் இடையிலான முதல் போட்டியை முன்னிட்டு இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக் கச்சேரி நடக்கவுள்ளது.

சிறப்பு மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவை!

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு சிறப்பு மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலக சதுரங்க பேரவையின் செஸ் போட்டி!

உலக சதுரங்க பேரவையின் 3வது சதுரங்க போட்டி இன்று London Alperton Community அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் 7 வயது முதல் 61 வயது வரை மொத்தமாக 165 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share