கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்! top 10 news today march 22
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று (மார்ச் 22) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட 7 மாநில அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். top 10 news today march 22
ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம்! top 10 news today march 22
தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து, இன்று காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன் நின்று தமிழக பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
வி.ஹெச்.பி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி!
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சென்னை நங்கநல்லூரில் இன்று மாலை 5.30 மணி முதல் 10 மணி வரை நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!
பெலகாவியில் கடந்த மாதம் 21-ந் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
அனைத்து பள்ளிகளும் இயங்கும்!
சென்னையில் அரசு, தனியார் உள்பட அனைத்து பள்ளிகளும் வெள்ளிக்கிழமை அட்டவணைபடி இன்று இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6 மணியளவில் கொண்டாடப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! top 10 news today march 22
இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 18வது தொடர் இன்று கொல்கத்தாவில் பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் இன்று மாலை தொடங்குகிறது. அங்கு இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களம் காண உள்ளன.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ட்ரீட் பிரிமீயர் லீக் வீரர்கள் தேர்வு!
தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான 2ம் கட்ட வீரர்கள் தேர்வுக்கான கிரிக்கெட் போட்டி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிபி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தேர்வாகும் நபர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம்.
