பாஜக கொறடா உத்தரவு! top 10 news today march 21
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 21) அனைத்து மக்களவை பாஜக எம்.பி.,க்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். top 10 news today march 21
ராமநாதபுரம் புத்தக திருவிழா! top 10 news today march 21
ராமநாதபுரம் மாவட்டம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ‘முகவை சங்கமம்’ எனும் 7வது புத்தகத் திருவிழாவை இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.
ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்.21 ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றே கடைசி நாள்! top 10 news today march 21
மத்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
இன்று முதல் தண்ணீர் வராது!
நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 14, 15, 16 ஆகிய மண்டல பகுதிகளில் இன்று முதல் 26ம் தேதி வரை குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்!
மதுரை மற்றும் திருச்சியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு ஆரம்பம்!
கர்நாடகாவில் நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு இன்று துவங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடக்கும் என கர்நாடக தேர்வு ஆணையம் செய்துள்ளது.
சென்னையில் மும்பை அணி!
வரும் 23ஆம் தேதி சிஎஸ்கே அணியுடன் மோத உள்ள நிலையில் சென்னை வந்துள்ள சூர்யகுமார் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளது.
10 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்!
தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், ஜெய்நடிப்பில் வெளியான பேபி & பேபி, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் உள்ளிட்ட 10 திரைப்படங்கள் இன்று ஓடிடியில் ரிலீசாகின்றன.
அதே போன்று ஷ்யாம் நடிப்பில் அஸ்திரம், பரத் நடிப்பில் ஓஜா உட்பட 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றனர். விஜய் நடித்த பகவதி, ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய படங்களும் ரீ ரிலிசாகின்றன.
ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகிறது.