டாப் 10 நியூஸ்: ரயில்வே வாரியத் தேர்வு ரத்து முதல் ‘ஆபிஸர் ஆன் டியூட்டி’ ஓடிடி ரிலீஸ் வரை!

Published On:

| By christopher

top 10 news today march 20

சென்னை திரும்புகிறார் ஆளுநர்

டெல்லி சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 20) மாலை சென்னை திரும்புகிறார். top 10 news today march 20

சட்டமன்றத்தில் இன்று… top 10 news today march 20

தமிழக சட்டமன்றத்தில் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதங்கள் நான்காவது நாளாக இன்று நடைபெறவுள்ளன.

ரயில்வே வாரியத் தேர்வு ரத்து!

நாடு முழுவதும் நேற்று நடைபெறவிருந்த ரயில் உதவி ஒட்டுநர் பதவிக்கான தேர்வு ரத்தான நிலையில், இன்று காலை நடைபெறவிருந்த RRB ALP CBT 2 (Shift-1) தேர்வும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரியலூர் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

அரியலூர் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டப வளாகத்தில் பபாசி சார்பில் மார்ச் 29 வரை 10 நாள்களுக்கு நடைபெறவுள்ள 8-ஆவது ஆண்டு புத்தகத்திருவிழாவை இன்று மாலை 5 மணிக்கு அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்கிறார்.

பாம்பாறு நீர்த்தேக்கம் – தண்ணீர் திறப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்கு வினாடிக்கு 42 கனஅடி தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

’ஒரு கிராமம் ஒரு அரசமரம்’ திட்டம் துவக்கம்!

கோவை மாவட்டம் பேரூர் அடிகளார் என போற்றப்படும் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ’ஒரு கிராமம் – ஒரு அரசமரம்’ எனும் திட்டத்தை ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இன்று பேரூர் ஆதின வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.

’ஆபிஸர் ஆன் டியூட்டி’ ஓடிடியில் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், பிரியாமணி நடித்துள்ள ’ஆபிஸர் ஆன் டியூட்டி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

சாஹல் விவாகரத்து வழக்கு!

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா விவாகரத்து வழக்கை இன்று குடும்ப நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மிதமான மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share