ரமலான் நோன்பு துவக்கம்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தெரிந்ததை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 2) முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையக தலைமை காஜி தாவுத் கைசர் அறிவித்துள்ளார். top 10 news today march 2
தேனியில் எடப்பாடி பழனிசாமி!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா தேனி மாவட்ட அதிமுக சார்பில் பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டியில் இன்று நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேச உள்ளார்.
சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்றும், நாளையும் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பார் கவுன்சில் தேர்தல்!
இந்திய பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
விழுப்புரம் புத்தக திருவிழா ஆரம்பம்!
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 3வது புத்தக திருவிழா இன்று துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.
தொழில்முனைவோர் உச்சி மாநாடு நிறைவு!
செயல்பாடுமிக்க பத்தாண்டு கொண்டாட்டமாக வருடாந்திர முதன்மை நிகழ்வாக ஐஐடி மெட்ராஸ் நடத்தி வரும் ’தொழில்முனைவோர் உச்சி மாநாடு’ (e-summit 2025) இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இணையவழி சேவைகள் ரத்து!
சென்னை மாநகராட்சியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று இரவு 10 மணி வரை இணையவழி சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் வாரம்! top 10 news today march 2
வரும் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதல் 8 ஆம் தேதி வரை சர்வதேச மகளிர் தின வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியா – நியூசிலாந்து மோதல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா நியூசிலாந்து அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தங்களது பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.