சுனிதா வில்லியம்ஸ் ரிட்டர்ன்ஸ்!
விண்வெளியில் ஒன்பது மாதம் தங்கியிருந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய நேரப்படி இன்று (மார்ச் 19) அதிகாலை 3.27 மணியளவில் பூமியில் பத்திரமாக தரையிறங்கி உள்ளார். top 10 news today march 19
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்!
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஊழல் வழக்கில் லாலு பிரசாத் ஆஜர்!
ரெயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் இன்று ஆஜராக உள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரையும், ஒரு படகையும் இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இன்று நடைபெறவுள்ளது.
ஆட்டோக்கள் ஓடாது! top 10 news today march 19
ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வலியுறுத்தி இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆட்டோக்கள் ஓடாது என சங்கங்கள் அறிவித்து உள்ளன.
3 நாட்களுக்கு வெயில் ஏறாது! top 10 news today march 19
தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 21 ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிற்றுந்துகளை இயக்க தேர்வு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான விண்ணப்பங்களை தோ்வு செய்வதற்கான குலுக்கல் இன்று நடைபெறுகிறது.
சென்னை – மும்பை டிக்கெட் விற்பனை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் சென்னை – மும்பை அணிகள் இடையேயான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.