முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்!
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் இன்று (மார்ச் 1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தும் அவர், அறிவாலயத்தில் காலை 9 மணியளவில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். top 10 news today march 1
மாணவர் சேர்க்கை தொடங்குகிறது!
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.
கிரிஸ் ஜோடாங்கர் சென்னை வருகை!
தமிழக காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளராக பதவி ஏற்றுள்ள கிரிஸ் ஜோடாங்கர் திடீர் பயணமாக இன்று மாலை சென்னை வருகிறார்.
வானிலை மையத்தின் முதல் பெண் தலைவர்!
சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த விஞ்ஞானி அமுதா இன்று காலை பொறுப்பேற்கவுள்ளார்.
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதம் தொடங்கியது!
சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று முதலே ரமலான் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பிறை தெரியாத நிலையில், நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமின்றி செல்வதற்காக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பெங்களூர் – டெல்லி மகளிர் மோதல்!
14 வது பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் – டெல்லி அணிகள் மோதுகின்றன.
தென்னாப்பிரிக்கா அரையிறுதி செல்லுமா?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையேயான லீக் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் விலை ரூ.92.39க்கும் விற்பனையாகிறது.