தலைமை தேர்தல் ஆணையர் வழக்கு! top 10 news today
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 19)விசாரிக்கிறது. முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் எதிர்ப்பை மீறி, தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
தலைமை தேர்தல் ஆணையர் பதவி ஏற்பு! top 10 news today
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் இன்று பதவியேற்கிறார். இவர், 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார்.
பட்ஜெட் கருத்துக்கேட்பு!
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறைகள், அது சார்ந்த அமைப்புகளுடன் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வணிக வரித்துறை, 20ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்துறை சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம் திறப்பு!
சென்னையின் நுழைவு வாயிலான சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகள் 80 சதவிகித நிறைவடைந்த நிலையில் இன்று (பிப்ரவரி 19) தாம்பரம் மார்க்க பாதை திறக்கப்படவுள்ளது.
வறண்ட வானிலை!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சப்தம் டிரெய்லர்!
ஆதி- அறிவழகன் கூட்டணியில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ள சப்தம் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடக்கம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன.
இந்தியா கத்தார் இடையே ஒப்பந்தம்!
இந்தியா கத்தார் இடையிலான இரு தரப்பு வணிகத்தை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி, கத்தார் அரசர் ஷேக் தமீம் முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
பெஞ்சல் நிவாரணம்!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணத் தொகையினை ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. top 10 news today