சென்னை வரும் ஸ்டாலின் top 10 news today February 7
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 7) சென்னை திரும்புகிறார்.
தேர்தல் ஆணையர் நியமன குழு கூட்டம்!
பிரதமர் மோடி தலைமையில் இன்று தேர்தல் ஆணையர் நியமன குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்!
மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
இரண்டாவது நாளாக ஆலோசனை!
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து காவல் துறை, வருமான வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் இரண்டாவது நாளாக இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார்.
போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை!
அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று தொழிற்சங்கத்தினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
டிஎன்பிஎல் ஏலம்!
டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
அண்ணாமலை டெல்லி பயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி விவகாரம் தொடர்பாக தலைமையிடம் பேசுவதற்கு இன்று டெல்லி செல்கிறார்,
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 627-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேமுதிக மா.செ.க்கள் கூட்டம்!
மக்களவைத் தோ்தல் தொடர்பாக ஆலோசனை செய்ய தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
மாநில மகளிர் ஹாக்கி!
டாக்டர் கே.எம். கோப்பைக்கான மாநில அளவிலான இரு நாள் மகளிர் ஹாக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முட்டை மசாலா சீஸ் பாஸ்தா!
மோடி ஜி நான் தான் நேரு பேசுறேன்…: அப்டேட் குமாரு
பியூட்டி டிப்ஸ்: உதடுகளை பராமரிக்க எளிய வழிகள்!
வேட்பாளர்களின் வைட்டமின்… எடப்பாடி வைக்கும் டெஸ்ட்!
top 10 news today February 7
