திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
சென்னை வரும் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் ஐ.ஐ.டி. வாயிலில் திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் இன்று (பிப்ரவரி 28) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. top 10 news today feb 28
சூஃபி இசை விழாவில் பிரதமர் மோடி!
புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் இன்று இரவு 7:30 மணியளவில் மாபெரும் சூஃபி இசை விழாவான ஜஹான்-இ-குஸ்ரு 2025-ல் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
காங்கிரஸ் ஆலோசனை!
எம்.பி சசி தரூரால் கேரள காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு நிலவி வரும் நிலையில், இன்று அதுதொடர்பாக ஆலோசனை நடத்த மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு!
தங்கள் நாட்டின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனில் இன்று சந்திக்க உள்ளார்.
சீமான் நேரில் ஆஜர் ஆவாரா?
நடிகை விஜயலட்சுமி வழக்கில், இன்று காலை 11 மணிக்கு சீமான் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால் தான் ஆஜராக முடியாது என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பழநி ரோப் கார் சேவை நிறுத்தம்!
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் செல்ல பயன்படும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்புப்பணிக்காக இன்று நிறுத்தப்படுகிறது.
போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்ட போரட்டத்திற்கு அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குட் பேட் அக்லி பட டீசர் ரிலீஸ்!
நடிகர் அஜித், த்ரிஷா நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
அரையிறுதிக்கு செல்லப்போவது யார்?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.