நெல்லை தூத்துக்குடிக்கு ஆளுநர் பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்ரவரி 27) முதல் 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். top 10 news today feb 27
சீமான் ஆஜர்!
விஜயலட்சுமி வழக்கில் இன்று காலை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
வேலூரில் மயானக் கொள்ளை திருவிழா!
வேலூர் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரிக்கு மறுநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அதன்படி, மயானக் கொள்ளை திருவிழா இன்று நடைபெறுவதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜேஇஇ – திருத்தங்கள் செய்யலாம்!
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
இந்தியா வரும் ரணில்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கும்மிடிபூண்டி மின்சார ரயில்கள் ரத்து!
கவரைப்பேட்டை – பொன்னேரி இடையே பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால், சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் இன்றும், மார்ச் 1ஆம் தேதியும் ரத்து செய்யப்படவுள்ளன.
9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூலியில் பூஜா ஹெக்டே நடனம்!
ரஜினி நடிக்கும் கூலி படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு அப்பாடல் குறித்து அப்டேட் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் – வங்கதேசம் மோதல்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ராவல்பிண்டியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
சிஎஸ்கே பயிற்சி முகாம்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கும் நிலையில், அதற்கு தயாராகும் விதமாக சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் 10 நாள் பயிற்சி முகாம் சென்னை நாவலூரில் உள்ள சிஎஸ்கே உயர்மட்ட செயல் திறன் மையத்தில் இன்று தொடங்குகிறது.