டாப் 10 நியூஸ் : கோவை வரும் அமித் ஷா முதல் ஜாக்டோ-ஜியோ போராட்டம் வரை!

Published On:

| By christopher

top 10 news today feb 25

அமைச்சரவை கூட்டம்!

தமிழக பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (பிப்ரவரி 25) மதியம் 12 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. top 10 news today feb 25

கோவை வருகிறார் அமித் ஷா top 10 news today feb 25

கட்சி அலுவலகம் திறப்பு, ஈஷாவில் நடக்கும் மகா சிவராத்திரி விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகிறார். இதையொட்டி கோவையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாக்டோ- ஜியோ போராட்டம்!

அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

2வது நாளாக தொடரும் போராட்டம்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

கட்டுநா் சங்கம் வேலைநிறுத்தம்!

ஜல்லி, எம்.சாண்ட் விலை உயா்வை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய கட்டுநா் சங்கம் முடிவு செய்துள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்!

மும்மொழிக் கொள்கையின் பெயரில் தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து சென்னை, மதுரை உட்பட 6 இடங்களில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவித்துள்ளது.

கொடநாடு வழக்கில் சம்மன்!

கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரித்த தனிப்படையை சேர்ந்த வேலுசாமி, விஜயகுமார் மற்றும் மகேஷ்குமார் ஆகிய 3 போலீசாரும் இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் கூட்டுக்குழு கூட்டம்!

புதிய வருமான வரி மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.

அமராவதி தண்ணீர் திறப்பு!

அமராவதி ஆற்றில் உள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களின் பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை 21 நாட்களுக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 1 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share