முதல்வர் மருந்தகம் திறப்பு!
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் இன்று (பிப்ரவரி 24) திறக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மருந்தகங்களை திறந்து வைக்கிறார். top 10 news today feb 24
ஜெயலலிதா பிறந்தநாள்! top 10 news today feb 24
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருக்கிறது. top 10 news today feb 24
அரசு ஊழியர்கள் – அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காண, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மீனவர்கள் ஸ்டிரைக்! top 10 news today feb 24
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு உதவித்தொகை!
மத்திய அரசின் ‘பி.எம் கிசான் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இன்று விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
டெல்லி சட்டப்பேரவை கூடுகிறது!
டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் இன்று சட்டப்பேரவை கூடுகிறது.
கெங்கராம்பாளையம் டோல்கேட் திறப்பு!
விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் உள்ள கெங்கராம்பாளையம் டோல்கேட் இன்று திறக்கப்பட உள்ளது.
மின்சார ரயில் சேவை ரத்து! top 10 news today feb 24
பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கதேசம் – நியூசிலாந்து மோதல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
யோகி பாபு பட டிரெய்லர் ரிலீஸ்!
யோகி பாபு நடித்த ‘லெக் பீஸ்’ படத்தின் டிரெய்லரை இன்று மாலை 4:30 மணிக்கு நடிகர் விஷால் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.