பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!
மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 23) முதல் 25ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். top 10 news today feb 23
ஒரே நாளில் 32 மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இன்று ஒரே நாளில் 32 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறை பிடித்துள்ளது இலங்கை கடற்படை.
ஜெர்மனியில் பொதுத்தேர்தல்!
ஜெர்மனியில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஓலாஃப் ஷோல்ஸ் கட்சி கருத்துக்கணிப்புகளில் பின்தங்கியுள்ள நிலையில், வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்!
பராமரிப்பு பணிகள் காரணமாக விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குடிநீர் விநியோகம் இல்லை!
திருச்சி அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் பால்பண்ணை சர்வீஸ் ரோடு அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதால், திருச்சி சிட்டி பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 5 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
INDvsPAK – கடற்கரையில் நேரலை!
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
சப்தம் – இரண்டாம் பாடல் ரிலீஸ்!
ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் இரண்டாம் பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.39க்கும் விற்பனையாகிறது.