மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பு!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கடலூருக்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு வேப்பூர் அருகே திருப்பெயரில் இன்று (பிப்ரவரி 22) நடைபெறுகிறது.top 10 news today feb 22
செய்முறைத் தேர்வு ஆரம்பம்! top 10 news today feb 22
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது
குரூப் 2 இரண்டாவது தாள் தேர்வு!
குரூப் 2 பிரதானத் தேர்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தேர்வு இன்று நடைபெறவுள்ளது.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்!
பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் ஜேடர்பாளையம் படுகை அணையிலிருந்து ராஜவாய்க்காலுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் இன்று முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு 10 மணி முதல் பிப்.23 காலை 6 மணி வரை விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதல்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் 4வது லீக் போட்டியில் பி பிரிவில் ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
மிஸ்டர் எக்ஸ் பட டீசர் ரிலீஸ்!
நடிகர் ஆர்யா நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட இருக்கிறது.
எமகாதகி டிரெய்லர் ரிலீஸ்!
ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், ரூபா ஹரிதா ஆகியோர் நடித்துள்ள எமகாதகி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் விலை ரூ.92.39க்கும் விற்பனையாகிறது.