ராகுல் வயநாடு வருகை!
தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான வயநாட்டிற்கு இன்று (ஏப்ரல் 11) வருகிறார்.
கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம்!
பேராசிரியர் ஹரிபத்மன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சென்னை கலாஷேத்ராவில் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.
தமிழக சட்டப்பேரவை!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
சச்சின் பைலட் உண்ணாவிரதம்!
அசோக் கெலாட் அரசு பாஜக பிரமுகர்களின் ஊழல் புகார்கள் மீது ஒழுங்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் கூறி சச்சின் பைலட் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்.
பன்னீர் செல்வத்துக்கு எதிரான தீர்மானம்!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இரண்டாம் நாள் ஒத்திகை!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டாவது நாளாக இன்றும் மருத்துவமனைகளில் ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.
சித்திரை திருவிழா!
புதுச்சேரி ராஜ்பவனில் இன்று சித்திரைத் திருநாள் நிகழ்ச்சியும் அதன்பின் சிறுதானிய உணவு விருந்தும் நடைபெற உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 325வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா-பிரான்ஸ் உச்சி மாநாடு!
இந்தியா-பிரான்ஸ் நட்புறவின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இந்தியா-பிரான்ஸ் வர்த்தக உச்சி மாநாடு இன்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெறுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழ்நாட்டில் புதிதாக 386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2,099 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளனர்.
ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷ் ஆஜராக சம்மன்!
தேசிய கட்சி அங்கீகாரம்: கெஜ்ரிவாலுக்கு எஸ் ! மம்தாவுக்கு நோ !
