டெல்லி முதல்வர் பதவியேற்பு!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் சாலிமர் பாக் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேகா குப்தா பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (பிப்ரவரி 20) டெல்லி முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். top 10 news today
நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை!
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு இன்று முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக சமூக நீதி தினம்!
சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வறண்ட வானிலை!
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்!
பெரம்பலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று தனியார் வேலை வய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்தியா வங்கதேசம் இடையே போட்டி!
சாம்பியன்ஸ் டிராபியில் இன்று இந்தியா – வங்கதேசம் விளையாடும் இரண்டாவது போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.
டெல்லியில் தியான மாநாடு!
தியான தலைவர்களின் உலகளாவிய மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. உலகத்தில் நிம்மதி, அமைதி, நீதி, வளர்ச்சி வருவதற்கு ஒவ்வொருவரும் தியானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியை ஒழிப்பது கட்டாயம்!
இந்தியை திணிப்பது கட்டாயம் என்றால் அதை ஒழிக்க வேண்டியதும் கட்டாயம் என்று கவிஞர் பாரதிதாசன் பாடலை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் முதல்வராக கெஜ்ரிவால்?
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்று தொடர்ந்து முதல்வர் பதவியை இழந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், அதற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் யூகங்களை வதந்திகளாக பரப்புகின்றனர் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்