டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

Published On:

| By Selvam

வாக்காளர் சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 13) வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

வானிலை நிலவரம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

வள்ளலார் முப்பெரும் விழா!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று சேலத்தில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

ADVERTISEMENT

டி20 உலக கோப்பை போட்டி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 175-வது‌ நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ‌.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ராகுல் நடைபயணம்!

மகாராஷ்டிராவில் நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் இன்று ஒருநாள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

புரோ கபடி போட்டி!

இன்றைய புரோ கபடி போட்டியில் யு மும்பா, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

துல்கர் சல்மான் படப்பிடிப்பு!

அபிலாஷ் ஜோஷிலி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த king of kotha படத்தின் முதற்கட்ட படப்படிப்பு நிறைவடைந்துள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 Years of Thuppakki!

துப்பாக்கி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைவதால் 10 Years of Thuppakki என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இமாச்சல் தேர்தல்: 65.5% சதவீத வாக்குகள் பதிவு!

இனி என்ன சந்தோஷம் இருக்கப்போகிறது: நளினி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share