டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top 10 news Tamil December 14 2023

முதல்வருடன் சந்திப்பு! top 10 news Tamil December 14 2023

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான மத்திய குழு மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த நிலையில், இன்று (டிசம்பர் 14) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்.

மக்களவையில் வண்ண புகை குண்டு: விவாதம்!

நாடாளுமன்ற அவைக்குள் நேற்று அத்துமீறி வண்ண புகை குண்டுகளை வீசியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இன்று விவாதிக்கப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் டோக்கன்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வரும் 17ஆம் தேதி முதல் வழங்க உள்ள நிலையில்,  இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படவுள்ளது.

யுஜிசி நெட் தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

மிக்ஜாம் புயலால் கடந்த 6 ஆம் தேதி நடந்த, யுஜிசி நெட் தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள், இன்று தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவு!

இன்று முகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு வழக்கத்தை விட கூடுதலாக டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் திரையிட தேர்வான 12 தமிழ் படங்களில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் முதல் 3 படங்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

400 ஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேகம்!

கோவை மாவட்டம் அன்னுாரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையின் இன்று 572 ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மூன்றாவது t20 போட்டி!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 8:30 மணிக்கு ஜோனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது.

இயக்குநர் வசந்த், நடிகர் ஆதி பிறந்தநாள்!

தேசிய விருது  பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்த்  மற்றும் ‘ஈரம்’ புகழ் நடிகர் ஆதி ஆகியோர் தங்களது பிறந்தாளை கொண்டாடுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவை மினி அடை

2023 யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் லிஸ்ட் இதோ!

top 10 news Tamil December 14 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share