டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

Top 10 News Tamil today march 3 2024

Top 10 News Tamil today march 3 2024

போலியோ சொட்டு மருந்து முகாம்!

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதிற்குபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (மார்ச் 3) நடைபெறுகிறது.

மத்திய அமைச்சரவை கூட்டம்!

ADVERTISEMENT

பிரதமர் மோடி தலைமையின் கீழ் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம்!

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை தனது 4 நாள் தேர்தல் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்குகிறார்.

ஐஸ்கிரீம் விலை உயர்வு!

ஆவின் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

பகவதியம்மன் கோவில் மாசித் திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம்,நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் இன்று ஒரு நாள் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 44 மின்சார ரயில்கள் ரத்தால் அந்த வழித்தடங்களில் இன்று கூடுதலாக 150 பேருந்துகளும், 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் : தேர்வு ரத்து!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற இருந்த பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

குஜராத் – டெல்லி மோதல்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 652வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடை எது?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?

Top 10 News Tamil today march 3 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share