டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

Top 10 News Tamil today march 1

பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது! Top 10 News Tamil today march 1

தமிழகத்தில் இன்று (மார்ச் 1) பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்!

இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடும் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் காலை 8 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

துணை ராணுவ படையினர் வருகை!

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகாக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் இன்று தமிழ்நாடு வர உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

அலெக்ஸ் நாவல்னி இறுதிச்சடங்கு!

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்!

தமிழ் சினிமா கண்ட முதல் சூப்பர் ஸ்டார் எம். கே. தியாகராஜ பாகவதரின் 114 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கோதையாறு அணை திறப்பு! 

கன்னியாகுமரி கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

தக் லைப் சூட்டிங் ஆரம்பம்!

செர்பியாவில் மணிரத்னம் – கமல்ஹாசனின் தக் லைஃப்  படத்தின் சூட்டிங் இன்று முதல் துவங்க உள்ளது.

மூன்று திரைப்படங்கள் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் இன்று போர், ஜோஷ்வா இமை போல் காக்க, சத்தமின்றி முத்தம் தா ஆகிய 3 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

உபி வாரியர்ஸ் – குஜராத் ஜியாண்ட்ஸ் மோதல்!

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் உபி வாரியர்ஸ் அணியுடன் குஜராத் ஜியாண்ட்ஸ் அணி இன்று இரவு 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 650வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாயின.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : முருங்கைக்காய் முந்திரி பொரியல்

முப்பாட்டன் முருகன் முத்தமிழ் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு

Top 10 News Tamil today march 1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share