இன்று வாக்கு எண்ணிக்கை!
18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு!
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதால் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்கா திறப்பு!
பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வார விடுமுறை தினமான இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து- ஸ்காட்லாந்து மோதல்!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பிரிஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 6-வது லீக்கில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் மோதுகின்றன.
இன்று முதல் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிடிஎஃப் வாசனுக்கு சம்மன்!
ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் இன்று விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
டிரீம் சீரிஸ் அறிமுகம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) இன்று அதன் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் (Hatchpack) கார் மாடல்களில் டிரீம் சீரிஸ் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.
சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) மற்றும் ஒகாசாகி டட்சுகி நீச்சல் கிளப்புடன் இணைந்து ஐப்பானின் புகழ் பெற்ற நீச்சல் வீரரான யூமா எடோ தலைமையில் சென்னை வேளச்சேரில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை நடக்கிறது.
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடக்கம்!
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் இன்று தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 80வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
எஸ்.பி.பி – என்றென்றும் இளமை ததும்பும் குரல்!
பியூட்டி டிப்ஸ்: முக இறுக்கத்துக்கு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்?
