டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

மூன்று மனுக்கள் மீது தீர்ப்பு!

நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது இன்று (ஜூன் 15) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி, சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT

கிண்டி மருத்துவமனை திறப்பு!

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.

ADVERTISEMENT

கடலுக்குள் சீறும் விசைப்படகுகள்!

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் அணிவகுத்து கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர்.

கரையை கடக்கும் புயல்!

அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல் இன்று பிற்பகல் 3 மணியளவில் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ஜக்காவ் கடற்கரை பகுதியில் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரிமலை நடை திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

போடி – சென்னை ரயில் இயக்கம்!

போடி- சென்னை சூப்பர்பாஸ்ட் ரயிலை மத்திய இணை அமைச்சர் முருகன் இன்று துவங்கி வைக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 390வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாயின.

மணிவண்ணன் நினைவு தினம்!

இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடி நடிகர் என்று தமிழ் சினிமாவில் பல்துறை வித்தகராக வலம் வந்த மணிவண்ணனின் நினைவு தினம் இன்று.

சதுரகிரிக்கு செல்ல அனுமதி!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று ஜூன் 15 முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

எடப்பாடியை அழைத்த அமித்ஷா: ரகசியத்தை உடைத்த அண்ணாமலை

கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு வெஜிடபுள் போண்டா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share