கஜேந்திர சிங் – துரை முருகன் சந்திப்பு!
காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை இன்று (ஜூலை 5) அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்திக்க உள்ளார்.
வேங்கைவயல் – டிஎன்ஏ சோதனை!
வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ சோதனைக்கு மறுத்த எட்டு பேரும் இன்று டிஎன்ஏ பரிசோதனை செய்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று பள்ளிகள் திறப்பு!
இருமாதங்களுக்கு மேலாக கலவரம் தொடர்ந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடைபெற இருக்கிறது.
கன மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொலைநிலைக் கல்வி – விண்ணப்பிக்கலாம்!
தொலைநிலைக் கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை!
நாகப்பட்டினத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜானி வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 410வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கடைசி லீக் ஆட்டம்!
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் (28வது) பால்சி திருச்சி, நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன.
