பிறந்தது புத்தாண்டு! top 10 news Tamil today January 1 2024
உலகம் முழுவதும் இன்று(ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!
தலைவர்கள் வாழ்த்து!
புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திரெபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58!
இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்!
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் ( SETC ) பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து!
ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை!
வெள்ளம் பாதித்த நெல்லை, குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் அங்குள்ள ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ரத்னம் அப்டேட்!
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு ரத்னம் படத்தின் முதல் பாடலான “வாராய் ரத்னம்” பாடலின் லிரிக்கல் வீடியோவின் ஃபர்ஸ்ட் ஷாட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு டைட்டன்ஸ் – புனேரி பால்டன் மோதல்!
புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் – புனேரி பால்டன் அணிகளும், இரவு 9 மணிக்கு உ.பி. யோத்தாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோத உள்ளன.
மிதமான மழை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 6-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்ன வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 590 வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரைச் சாறு
புத்தாண்டு பார்ட்டி பஸ்: அப்டேட் குமாரு
top 10 news Tamil today January 1 2024
