மிக கனமழை எச்சரிக்கை! top 10 news Tamil today December 17 2023
திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 17) மிக கனமழையும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ள நிவாரண நிதி வழங்குகிறார் முதல்வர்!
மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
காசி தமிழ் சங்கமம் : பிரதமர் தொடங்கி வைக்கிறார்!
உத்தரபிரதேசத்தின் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி இன்று மாலை 5.15 மணிக்கு நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைக்கிறார்.
சூரத் வைர பங்குச்சந்தை திறப்பு!
குஜராத்தில் வைர வியாபாரிகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ‘சூரத் வைர பங்குச்சந்தை’ என்ற உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
குமரி டூ காசி சிறப்பு ரயில்!
மதுரை வழியாக கன்னியாகுமரி – காசி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குவைத் மன்னர் மறைவு : துக்கம் அனுசரிப்பு!
குவைத் மன்னராக 3 ஆண்டுகளாக இருந்த ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா (வயது 86) நேற்று காலமான நிலையில் நாடு முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.5ல் மெட்ரோவில் பயணம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு இன்று ரூ.5 கட்டணத்தை செலுத்தி, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை செஸ் சாம்பியன்ஷிப் ஆரம்பம்!
சென்னையில் நடைபெறும் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று முதல் தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 575 ஆவது நாளாக விலை மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: வீக் எண்டில் விருந்து… அடுத்த நாள் பட்டினி… இந்தப் பழக்கம் சரியா?
ஒரு கால்குலேட்டர் என்ன விலை வரும்?: அப்டேட் குமாரு
top 10 news Tamil today December 17 2023