பத்து மாவட்டங்களில் கனமழை!
தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 5) 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்எஸ்எஸ்செயற்குழு கூட்டம்!
குஜராத் மாநிலம் புஜ் நகரில் ஆர்எஸ்எஸ் இந்தியா செயற்குழு கூட்டம் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று மருத்துவ முகாம்!
தமிழகத்தில் மழைக்கால நோய்களை தடுப்பதற்காக அரசின் சார்பில் இரண்டாவது வாரமாக இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
ரேஷன் கடைகள் இயங்கும்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக நவம்பர் 5ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதல்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 37வது லீக் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
லியோ வெற்றி விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு!
எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதியம் 12 மணிக்கும், விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழா மாலை 6.30 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
58 மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று 58 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் சேவை ரத்து!
தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மழையால் சீரமைப்பு பணியும் தாமதமாவதால் இன்று நாளையும் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் வேலை நிறுத்தம்!
திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ஜவுளி உற்பத்தியாளர்கள் அரசின் புதிய ஜவுளிக் கொள்கை, மின்சார மானியம் ரத்து உள்ளிட்டவைகளை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 533வது நாளாக விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொலைக்காட்சி ஊடகங்கள் சொல்ல விரும்பாத சில உண்மைகள்: ஜெர்மன் நாஜிசமும் இஸ்ரேலிய பாசிசமும்!
சண்டே ஸ்பெஷல்: மிட் நைட் பிரியாணி பிரியரா நீங்கள்… ஒரு நிமிஷம்!