டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

பாலமேடு ஜல்லிக்கட்டு!

அவனியாபுரத்தைத் தொடர்ந்து மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலை 7 மணிக்கு, அதில் பங்கேற்கும் வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்குகிறது.

கேரளா செல்லும் மோடி

நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கேரளாவுக்கு செல்கிறார்.

நாகாலாந்தில் ராகுல்காந்தி யாத்திரை!

இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மணிப்பூரில் இருந்து நாகாலாந்துக்கு சென்ற ராகுல்காந்தி, இன்று விஸ்வேமா கிராமத்திலிருந்து தனது 3வது நாள் யாத்திரையை தொடங்குகிறார்.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்திருக்கும்!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறக்கப்பட்டிருக்கும் என மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

கங்குவா செகண்ட் லுக் ரிலீஸ்!

சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

விற்பனைக்கு வரும் ஹூண்டாய் காரின் புது மாடல்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் காரான ஹூண்டாய் க்ரெட்டாவின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் இன்று விற்பனைக்கு வருகிறது.

இன்று பள்ளிகள் திறப்பு!

டெல்லியில் குளிர்கால விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் கடும்பனி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை நிலவும்!

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில்  இன்று 605வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பொங்கலும், வேஷ்டியும்: அப்டேட் குமாரு

தங்கலான் படத்தின் புது ரிலீஸ் அப்டேட் இதோ!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share