டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

சித்தன் ஷிவிர் சிந்தனையாளர் கூட்டம்

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் சித்தன் ஷிவிர் சிந்தனையாளர் கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

பத்திரிகையாளர் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பத்திரிகையாளர்கள் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

வேலுமணி வழக்கு விசாரணை

சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சர் வேலுமணி வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ADVERTISEMENT

எரிவாயு நுகர்வோர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று கிண்டியில் நடைபெறவுள்ளது.

வானிலை நிலவரம்

தமிழகத்திற்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் இன்று 160வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காலங்களில் அவள் வசந்தம்

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக், அஞ்சலி நாயர், அனிதா சம்பத் எனப் பலர் நடித்திருக்கும் ’காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படம் இன்று வெளியாகிறது.

உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

புரோ கபடி

புரோ கபடி போட்டியில் இன்று தமிழ் தலைவாஸ் – பிங்க் பேந்தர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ்- புனேரி பல்டன், பாட்னா பைரேட்ஸ் – யுபி யோதாஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

T20 WorldCup 2022 : கடைசி பந்தில் சொதப்பிய பாகிஸ்தான்… த்ரில் வெற்றி பெற்ற ஜிம்பாவே!

திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share