மின் கட்டணம் உயர்வு அமல்!
புதுச்சேரியில் வீட்டு உபயோக மின்கட்டணம் மற்றும் வர்த்தக பயன்பாட்டில் உள்ள உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று (ஜூன் 16) முதல் அமலுக்கு வருகிறது.
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு!
1,056 சிவில் சர்வீஸ் மற்றும் 150 இந்திய வனத்துறை சேவை பணிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது.
பேருந்து நிலையம் மாற்றம்!
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகர திட்டப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் பேருந்து நிலையம் தற்காலிகமாக ஏஎஃப் டி மைதானத்தில் செயல்பட உள்ளது.
கடலில் இறங்க வேண்டாம்!
தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று இரவு 11.30 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முதல் மழை நீடிக்கும்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 21 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எழும்பூர் – விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் ரத்து!
ரயில்வே பராமரிப்பு பணி காரணங்களுக்காக, சென்னை எழும்பூர் – விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் உட்பட 28 சிறப்பு ரயில்கள் இன்று முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இயக்குனர் சரண் பிறந்த நாள்!
காதல் மன்னன் அஜித்தை ஆக்ஷன் அல்டிமேட் ஸ்டாராக மாற்றிய இயக்குனர் சரணின் 58வது பிறந்த நாள் இன்று.
நடிகை அஞ்சலி பிறந்தநாள்!
கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, பேரன்பு, இறைவி போன்ற தமிழ் சினிமா படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ள யதார்த்த நடிகை அஞ்சலிக்கு பிறந்தநாள் இன்று.
பாகிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதல்!
டி20 உலகக்கோப்பை இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தொடரிலிருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் – அயர்லாந்து அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 92-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…