டாப் 10 நியூஸ் : வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி முதல் இந்தியன் 2 அப்டேட் வரை!

Published On:

| By Kavi

நெல்லை செல்லும் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று(மே 29) நெல்லை செல்கிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க தூத்துக்குடி மற்றும் நெல்லையில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒடிஷாவில் மோடி
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று ஒடிஷா செல்லும் பிரதமர் மோடி, பரிபாடா சாவ் மாவட்டம் மற்றும் கேந்திரபாரா ஆகிய இடங்களில் இன்று பேரணி நடத்தவுள்ளார்.

ADVERTISEMENT

கேரள லாட்டரி!
கேரளா விஷு பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. காலை 11.30 மணி வரை டிக்கெட்டுகள் வாங்கலாம். வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படும்.

வெப்பநிலை!
இன்று அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

உலக தம்பதியினர் தினம்!
திருமணமான தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் இணைந்த தருணம், இதுவரை பயணித்து வந்த வாழ்க்கை பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 29ஆம் தேதி உலக தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

பெட்ரோல்-டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 74வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.

எல்.முருகன் பிறந்தநாள்!
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்தியன் 2 – இரண்டாம் சிங்கிள்
கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இரண்டாம் சிங்கிள் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வைகோவுக்கு அறுவை சிகிச்சை!
இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: தலைவலிக்காக அடிக்கடி மாத்திரைகள் போடுபவரா நீங்கள்?

மறுபடியும் அதே உருட்டு: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share