டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

Published On:

| By Selvam

மகா காளேஸ்வரர் ஆலயம் திறப்பு!

மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜெயினியில் அமைந்துள்ள மகா காளேஸ்வரர் ஆலயம் ரூ.856 கோடியில் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் வருகைக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11) திறந்து வைக்கிறார்.

ADVERTISEMENT

சமூக நல்லிணக்க பேரணி!

விசிக ஒருங்கிணைப்பில், இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட 17 கட்சிகள் பங்குபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கி.ராஜநாராயணன் நினைவு பள்ளி!

தூத்துக்குடி மாவட்டம் இடைச்செவல் கிராமத்தில், மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவாக அவர் படித்த பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

ADVERTISEMENT

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை!

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

ராம் புதிய படம் அறிவிப்பு!

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிக்கும் படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 143 வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ‌.94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதல்!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

டெட் தேர்வு ஹால்டிக்கெட்!

அக்டோபர் 14 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள TET தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி  கூட்டம்: கே.பி.முனுசாமி புறக்கணிப்பு- பின்னணி!

போலி ட்விட்டர் கணக்கு: கவிஞர் தாமரைக்கு வந்த சோதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share