டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

Published On:

| By Selvam

மோடி அயோத்தி பயணம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 23) அயோத்திக்கு பயணம் செய்து தீப உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி 43-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை, கர்நாடக மாநிலம் ஏரகிரா பகுதியில் துவங்கி ராய்ச்சூர் பகுதியில் நிறைவு செய்கிறார்.

விக்ரம் புதிய படம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகிறது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் இலங்கை – அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 155-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ‌.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை!

தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31-வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 214 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 3,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலக தலைவன் டீசர் வெளியீடு!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

ஒடிசா – கேரளா அணிகள் மோதல்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஒடிசா – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

வானிலை நிலவரம்!

தென்கிழக்கு பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தியா பாகிஸ்தான் : புள்ளிவிவரம் லிஸ்ட் இதோ!

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share