நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று(நவம்பர் 25) தொடங்கி வரும் டிசம்பர் 21ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பவுள்ளன. வக்ஃப் மசோதா உட்பட 15 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
விழுதுகள் மையம்!
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் தொடர்பான மறுவாழ்வு தேவைகளை பூர்த்தி செய்யும் ஒருங்கிணைந்த சேவை மையமான ‘விழுதுகள்’ முதல் மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கண்ணகி நகரில் தொடங்கி வைக்கவுள்ளார்.
கனமழை!
கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா புதிய அரசு!
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள மகாயுதி கூட்டணியில், யார் முதல்வர், யார் யாருக்கு எந்தப் பதவி கிடைக்கும் என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம், இன்றுடன் முடிவடைவதால், புதிய அரசு இன்று பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் செல்லும் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று, நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்!
இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம். டொமினிகன் குடியரசு நாட்டின் அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த மூன்று பெண் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட நாள் நவம்பர் 25. இதை அனுசரிக்கும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச கூட்டுறவு கூட்டணி மாநாடு!
உலகளாவிய கூட்டுறவு இயக்கத்தின் முதன்மை அமைப்பான சர்வதேச கூட்டுறவு கூட்டணி மாநாடு 2024-ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு!
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு இன்று முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐபிஎல் ஏலம்!
2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இரண்டாவது நாளாக இன்று சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? காரணம் இதுதான்!
கிச்சன் கீர்த்தனா: இறால் கீரை அடை!
பாலியல் வழக்கில் Ex ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்!
“நிஜ்ஜார் கொலைக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை” : கனடா அரசு