ரம்ஜான் பண்டிகை! Top 10 News in Tamil March 31 2025
சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் நேற்று ஷவ்வால் மாத பிறை தென்பட்டதால் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
வானிலை அப்டேட்!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கால்பந்து உச்சி மாநாடு!
சென்னை மயிலாப்பூரில் இன்றும் நாளையும் கால்பந்து உச்சி மாநாடு 2025 நடைபெற உள்ளது. இதில் கால்பந்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் விவாதங்கள், தொழில் நுண்ணறிவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
ரம்ஜான் விடுமுறை இல்லை!
இன்றுடன் 2024-25ம் நிதியாண்டு முடிவுக்கு வருகிறது. நாளை புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதனால் 2024-25ம் நிதியாண்டு கணக்குகளை முடிக்க வேண்டும் என்பதால் இன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சொத்து வரி செலுத்த கடைசி நாள்!
சொத்து வரி, தொழில் வரி செலுத்த இன்று கடைசி நாள் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
ஐபிஎல் தொடர்!
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
கோடை விடுமுறை!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை! Top 10 News in Tamil March 31 2025
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பதிவு கட்டணம் குறைப்பு!
பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தரம் உயரும் பேரூராட்சிகள்!
போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.