வேளாண் பட்ஜெட் தாக்கல்! Top 10 News in Tamil March 15 2025
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. துறை அமைச்சர் எம்.ஆர்,கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளார்.
ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு!
அரசு பள்ளிகளில் பணியாற்றும் தேர்வு செய்யப்பட்ட அறிவியல், கணித பிரிவு ஆசிரியர்களுக்கான அறிவியல் மாநாடு இன்று நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மண்டலங்களில் நடைபெறுகிறது.
உலக நுகர்வோர் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 உயர்ந்து ரூ.65,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வறண்ட வானிலை!
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரும் விண்கலம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது.
சபரிமலையில் பங்குனி பூஜை!
பங்குனி மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் 19ஆம் தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் என்று தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்! Top 10 News in Tamil March 15 2025
3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று டெல்லி – மும்பை அணிகள் மோதுகின்றன.
உதவித் தொகை பெற விண்ணப்பம்!
பள்ளி மாணவர்கள் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி.