டாப் 10 நியூஸ் : மோடி பதவியேற்பு முதல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் வரை!

Published On:

| By Kavi

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பு!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மோடி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இன்று (ஜூன் 9) மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதற்காக டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகளும் தீவிர பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. 6244 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்த தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். காலை 9:30 மணிக்கு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் வருகை தர வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்!

9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை இன்று எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

லாக் டவுன் டீசர்!

லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகை அனுபமா நடித்துள்ள லாக் டவுன் திரைப்படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

பிரேம்ஜிக்கு திருமணம்!

நடிகர், இசையமைப்பாளர் என தமிழ் திரையுலகில் பல திறமைகளுடன் இயங்கி வரும் பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது.

வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 13ஆம் தேதி வரை அதிகபட்சவெப்ப நிலை 2° –3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை! 

சென்னையில் 85 வது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிக்கிம் முதல்வர் பதவி ஏற்பு!

மக்களவைத் தேர்தலோடு சிக்கிம் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதையடுத்து, சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் இன்று பதவி ஏற்கிறார்.

மாநகர பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்!

இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி ஞாயிறு கிழமையான இன்று சென்னை மாநகர பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு எதிராக யோகி – அவசர கூட்டம் கூட்டிய மோடி… பாஜகவில் அடுத்த பூகம்பம்!

அதான் பயமா இருக்கு : அப்டேட் குமாரு

மோடியை எதிர்த்து 2 முறை என்.டி.ஏ-விலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடு; மோடி 3.0 நிலைக்குமா?

”தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி அமைப்போம்” : சீமான் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share