டாப் 10 செய்திகள்: திமுக முப்பெரும் விழா முதல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வரை!

Published On:

| By Kavi

முப்பெரும் விழா!

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு திமுகவை வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடக்கிறது.

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விடுமுறை தினங்களான 23.7.2023 மற்றும் 4.8.2023 ஆகிய 2 நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் பணிபுரிந்தனர். அதற்கு ஈடாக அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் இன்று மற்றும் அடுத்த சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி 7 உச்சி மாநாடு!

இத்தாலி நாட்டில் கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. உலக பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ளவது, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் இந்த மாநாடு மூன்றாவது நாளாக இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொண்டுள்ளார்.

இந்தியா கனடா மோதல்!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது.

துப்பாக்கி சுடும் போட்டி

தமிழ்நாடு காவல் துறையினரால், மகளிர் காவலர்களுக்கான சிறப்பு அகில இந்திய காவல் துறை துப்பாக்கிச் சுடும் போட்டி இன்று முதல் 20ஆம் தேதி வரை செங்கல்பட்டு, ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்!

உலக சுகாதார நிறுவனம் முதியோரைப் பாதுகாக்கும் உணர்வை இளம் வயதினரிடையே ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் 15ஆம் தேதியை முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக கடைபிடித்து வருகிறது.

பொது வினியோகத் திட்ட குறைத்தீர் முகாம்!
குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், சேர்த்தல், முகவரி மாற்றம் கடை மாற்றம், நகல் அட்டை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு, சேவை குறைபாடு உள்ளிட்டவற்றை சரி செய்வதற்காக இன்று திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது விநியோகத் திட்ட குறைத்தீர் முகாம் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு ரூ.1000
உயர்கல்வி செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கோவையில் நேற்று நடந்த ஐம்பெரும் விழாவில் கூறினார்.

வானிலை நிலவரம்!
இன்று முதல் ஜூன் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை! 

சென்னையில் 91வது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை தட்டை!

இந்த அக்கா – தம்பி பாசம் தாங்க முடியல… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: லெமன் டீ கொடுத்த தமிழிசை- ஸ்வீட் கொடுத்த அண்ணாமலை- சந்திப்பில் நடந்தது என்ன?

திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரம்: தமிழக அரசு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share