இளையராஜா சிம்பொனி! Top 10 News in Tamil 8 March 2025
இன்று (மார்ச் 8) லண்டனில் முதல் முறையாக மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
உலக மகளிர் தினம்!
1908- மார்ச் 8-ல் நியூயார்க் நகரில் குறைந்த வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகிய கோரிக்கைகளுடன் 15,000 பெண்கள் பேரணி சென்றனர். இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமருக்கு பெண் போலீஸ் பாதுகாப்பு!
பிரதமர் மோடி குஜராத் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திற்கு செல்லும் நிலையில், இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவருக்கு பெண் போலீசார் மட்டும் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.
டான்செட் ஹால் டிக்கெட்!
எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கான டான்செட் பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பிங்க் ஆட்டோ!
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் பிங்க் ஆட்டோ திட்டம் அமலுக்கு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மீன்வள புத்தொழில் மாநாடு 2.0
ஹைதராபாத்தில் மீன்வள புத்தொழில் மாநாடு 2.0 -வை மத்திய மீன்வளத்துறை இன்று நடத்தவுள்ளது.
ரயில் சேவை ரத்து!
பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்ட்ரல் முதல் சூலூர் பேட்டை வரை கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் 16 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை! Top 10 News in Tamil 8 March 2025
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மகளிர் பிரீமியர் லீக்! Top 10 News in Tamil 8 March 2025
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இன்று மதியம் 3 மணிக்கு எதிர்கொள்கிறது.
