அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் இன்று (ஆகஸ்ட் 30) தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திடுகிறார்.
பொன் மாணிக்கவேல் வழக்கில் தீர்ப்பு!
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐஜியான பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
மும்பையில் பிரதமர் உரை!
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் குளோபல் பின்டெக் பெஸ்ட் -2024 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
குடியரசு தலைவருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு!
டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறி குடியரசு தலைவரை டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் இடங்கள் – இறுதி ஒதுக்கீடு!
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் இன்று வெளியாக உள்ளது. செப்டம்பர் -5 ஆம் தேதி மதியம் வரை இந்த ஆணையை மாணவர்கள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சிறப்பு பேருந்துகள்!
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை!
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதால் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று சென்னைப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 166-வது நாளாக இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும். டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டலாம்!
டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் குடைச்சல்… தனித்தே போட்டியிடணும்! பெருகும் திமுக நிர்வாகிகள் குரல்!
நைட்டு நடந்தா நாய் கடிக்கும்ல : அப்டேட் குமாரு
பேராசிரியர்கள் முறைகேடு ஆட்சி திறனின்மையை காட்டுகிறது : சீமான் குற்றச்சாட்டு!