திமுக ஆர்ப்பாட்டம்! Top 10 News in Tamil 29 March 2025
100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய சுமார் 4000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் வைத்துள்ளதை கண்டித்து, இன்று (மார்ச் 29) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி!
பாஜக மகளிர் அணி சார்பில் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு இன்று டெல்லியில் புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் பிராந்திய அளவிலான முக்கிய ஆளுமைகளை பாஜக கொண்டாடி வரும் நிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ரேஷன் கடைகள் இயங்கும்!
தமிழகம் முழுவதும் சனிக்கிழமையான இன்று நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சூரியகிரகணம் Top 10 News in Tamil 29 March 2025
இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. அதிகாலை 4.50 மணிக்குத் தொடங்கி உச்சத்தை அடைய காலை 6.47 மணியாகிவிடும். அதுபோல 8.43 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும்.
வானிலை நிலவரம்!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 29 முதல் 30ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 31ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பை – குஜராத் மோதல்!
ஐபிஎல் 2025 தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை நேற்று (மார்ச் 28) விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை மே 2ஆம் தேதிக்குள் சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 53% இருந்து 55% ஆக உயர்த்தப்படுகிறது.
நிலநடுக்கம்!
மியான்மரில் நேற்று 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வருகின்றன. எனினும் பலரும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது.