பட்ஜெட் தாக்கல்!
நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.
மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்!
சென்னையில் இன்று முதல் ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி வரை மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்!
மின் கட்டண உயர்வு மற்றும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் முறையாக வழங்காததை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ரயில்கள் சென்னைக்கு வராது!
தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தென்மாவட்ட ரயில்கள் இன்று முதல் சென்னைக்கு வராது என்றும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மிதமான மழை பெய்யக்கூடும்!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சூர்யா பிறந்தநாள் இன்று!
நந்தா, பிதாமகன், பேரழகன், கஜினி, ஏழாம் அறிவு, சூரரைபோற்று, ஜெய்பீம் என தொடர்ந்து பல படங்களில் நவரச நடிப்பை அளித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சூர்யா பிறந்த நாள் இன்று.
கங்குவா பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் முதல் பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்தியா – நேபாளம் மோதல்!
இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை மகளிர் போட்டியில் நேபாளம் அணியை இன்று இரவு 7 மணிக்கு இந்திய அணி எதிர்கொள்கிறது.
சாஹலின் பிறந்த நாள்!
இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பிறந்த நாள் இன்று.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 128வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…