துணை முதலமைச்சராக உதயநிதி பதவியேற்பு!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 29) மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்க உள்ளார்.
4 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்!
அமைச்சரவை மாற்றமாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்கின்றனர்.
புதிய மெட்ரோ ரயில் தொடக்கம்!
புனே மெட்ரோவின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
தமிழக மீனவர்கள் மீண்டும் கைது!
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இன்று அதிகாலை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 படகுகளைப் பறிமுதல் செய்துள்ளது.
உலக இதய தினம்!
இதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இன்று உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பூமியின் இரண்டாவது நிலா!
இரண்டாவது நிலா என அறியப்படும் 2024 PT5 என்று பெயரிடப்பட்ட ஒரு சிறிய விண்கல் இன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. ஆனால் இதை சிறப்பு தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் WTC பைனல் வாய்ப்புக்கு ஆபத்து!
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் 3வது நாள் ஆட்டமும் கைவிடப்பட்டால், WTC இறுதிப்போட்டிக்கு இந்தியாவுக்கான வாய்ப்பை குறைக்க வாய்ப்பு உள்ளது.
RETENTION விதிகள் ரிலீஸ்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான RETENTION விதிகள் இன்று வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 196வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: நாட்டுக்கோழி முட்டையில்தான் சத்துகள் அதிகம் உள்ளதா?
“கூட்டணிக்குள் மோதலா?, எதிரிகள் கனவு பலிக்காது”: ஸ்டாலின் பேச்சு!