டாப் 10 நியூஸ் : தவெக மாநாடு தேதி அறிவிப்பு முதல் வடிவேலு பிறந்தநாள் வரை!

Published On:

| By christopher

Top 10 News : From TVK Conference Date Announcement to Vadivelu's Birthday!

தவெக மாநாடு தேதியை அறிவிக்கிறார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் அதிகாரப்பூர்வ தேதியை இன்று (செப்டம்பர் 12) அறிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

வெள்ளையன் உடல் அடக்கம்!

மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையனின் உடல் அவரது சொந்த ஊரான திருச்செந்தூரை அடுத்த பிச்சிவிளை கிராமத்தில் அவரது தந்தையின் கல்லறைக்கு அருகே இன்று மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் – ரயில் டிக்கெட் முன்பதிவு!

ரயிலில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பம்!

முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் இன்று விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் இன்று பதிவு செய்யலாம்  சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வடிவேலு பிறந்தநாள் இன்று!

தமிழ் திரையுலகின் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் மீம்ஸ்களின் நாயகனாகவும் திகழும் வைகைபுயல் வடிவேலு  இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விவோ 5ஜி அறிமுகம்!

விவோ நிறுவனம் தனது விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்ய உள்ளது.

இந்திய அணி பயிற்சி முகாம்!

வங்கதேச டெஸ்ட் தொடரை முன்னிட்டு இன்று முதல் சேப்பாக்கத்தில் இந்திய அணியினருக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மேற்பார்வையில் 5 நாள் பயிற்சி முகாம் தொடங்குகிறது.

மிதமான மழை பெய்யும்!

மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 179வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : இறால் மசால்

டிஜிட்டல் திண்ணை: சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் மகாவிஷ்ணு… கஸ்டடியில் என்ன நடக்கிறது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share