வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது!
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இன்று (ஜனவரி 10) முதல் தொடங்குகிறது. வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்!
பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது.
திமுக மாணவரணி போரட்டம்!
யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக மாணவரணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
மா.சுப்பிரமணியன் வழக்கில் தீர்ப்பு!
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்களை தாக்கியதாகவும், பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது 2002ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பணி தொடக்கம்!
ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு பணியானது இன்று (ஜனவரி 10) தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 1,560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ரேசன் கடைகள் இயங்கும்!
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக இன்று அனைத்து நியாயவிலை கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
திருச்சியில் உள்ளூர் விடுமுறை!
இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று திறக்கப்படுவதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர் ரிலீஸ்!
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர், பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான், கலையரசன், ஷேன் நிகம் நடித்துள்ள மெட்ராஸ்காரன் ஆகிய திரைப்படங்கள் இன்று ரிலீசாகின்றன.
சர்வதேச பலூன் திருவிழா!
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ரெட் வெல்வெட் பொங்கல்
சார்னு சொன்னாலே பக்குன்னு இருக்கு அப்டேட் குமாரு
இனிமே இதுதான் கிங்… பிடிஆர் போட்ட மாஸ்டர் பிளான் – அசந்து போன ஸ்டாலின்