டாப் 10 நியூஸ் : அமித் ஷாவுக்கு எதிராக தொடரும் போராட்டம் முதல் கிறிஸ்துமஸ் விழாவில் மோடி வரை!

Published On:

| By christopher

அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம்!

அம்பேத்கரை இழிவாகப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று (டிசம்பர் 23) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

பணி நியமன உத்தரவு வழங்குகிறார் மோடி

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ‘வேலைவாய்ப்பு திருவிழா’ மூலம் பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை இன்று காணொலி காட்சி மூலம் வழங்குகிறார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – மோடி பங்கேற்பு!

டெல்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இன்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

நெல்லையில் கேரள கழிவுகள் அகற்றம்!

நெல்லையில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு 18 லாரிகள் கேரளா சென்ற நிலையில் எஞ்சிய கழிவுகளும் இன்று நண்பகலுக்குள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தேயிலை விநியோகம் நிறுத்தம்!

தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை வழங்காத, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் பிரச்னைக்கு தீர்வு காணாததால், இன்று முதல் தேயிலை விநியோகம் செய்வதை விவசாயிகள் நிறுத்த உள்ளனர்.

தனியார் பேருந்துகள் இயக்கம்!

கடலூர் – சிதம்பரம் வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர ரூ.14,090 நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்துகள் இன்று இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஸ்மைல் மேன் டிரெய்லர் ரிலீஸ்!

சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில் இயக்கம்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு வழியாக கொச்சுவேலிக்கு டிசம்பர் 23ம் தேதி இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90க்கும், டீசல் ரூ. 92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மருந்து சாதம்

டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் கட்சிகளை தட்டி வைக்கணும்… கான்ட்ராக்ட் எல்லாம் அதிமுககாரனுக்கே… ஸ்டாலின் கண்ணெதிரில் கலகக் குரல்கள்!

இதெல்லாம் நமக்கு தேவையா கோபி… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share