பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்!
டெல்லியில் பா.ஜ.க.கூட்டணியின் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம் இன்று (ஜூன் 6) நடைபெறுகிறது.
ரேவண்ணா நீதிமன்றத்தில் ஆஜர்!
பலாத்கார வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் வாபஸ் பெறப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மின் தடை!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அரசு ஐடிஐ-களில் சேர விண்ணப்பிக்கலாம்!
அரசு ஐடிஐ-களில் சேர நாளை கடைசி நாள் என்பதால் மாணவர்கள் இன்று ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறியுள்ளார்.
HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவை நிறுத்தம்!
HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் சேவை இன்று மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை நிறுத்தப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.
வெயில் அதிகரிக்கும்!
தமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்கும். அதே சமயம், இன்று முதல் 13 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா – ஓமன் அணிகள் மோதல்!
டி20 உலகக்கோப்பையில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஓமன் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆலாப் ராஜூ பிறந்தநாள்!
‘என்னமோ ஏதோ’ பாடல் மூலம் இளைஞர்களின் இதயம் தொட்ட சென்னையைச் சேர்ந்த பாடகர் ஆலாப் ராஜு பிறந்த நாள் இன்று.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 82வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 க்கும், டீசல் ரூ. 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…