உண்ணாவிரத போராட்டம்!
பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் கோரி மதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று (ஜனவரி 5) உண்ணாவிரத போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் மாரத்தான் போட்டி!
சென்னையில் மாரத்தான் போட்டி நடப்பதையொட்டி முக்கிய சாலைகளில் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சத்குருவுக்கு பாராட்டு விழா!
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் மத்துவராயபுரத்தில் இன்று ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் – ஆலோசனை!
பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி இன்று நடைபெறுவதால் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் தாம்பரத்திற்கு கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் முன்பதிவு ஆரம்பம்!
பொங்கல் நேரத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வே சென்னையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா வெற்றி பெறுமா?
சிட்னி டெஸ்ட்டில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
தீபிகா படுகோன் பிறந்தநாள்!
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை என அனைத்து இடத்திலும் அழியாத தடத்தை பதித்து வரும் நடிகை தீபிகா படுகோன் இன்று அவரது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மிதமான மழை பெய்யக்கூடும்
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: விருந்துக்கு செல்கிறீர்களா… அதற்கு முன் இதையெல்லாம் செய்யாதீங்க!
துரைமுருகன் ரெய்டு: பிடிபட்ட இரண்டரை கோடி ரூபாய்… அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் என்ன?