டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் ராகுல்காந்தி வழக்கு வரை!

Published On:

| By christopher

காங்கிரஸ் செயற்கு குழு!

மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று (ஜூன் 7) காலை 11 மணிக்கு கூடுகிறது காங்கிரஸ் செயற்கு குழு. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்!

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.

ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகிறார்.

அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் தொடக்கம்!

அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் 3ம் கட்டப் பயணம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து இன்று தொடங்குகிறது.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் ஜூன் 9 ஆம் தேதிகளில் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 535 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

செட் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த செட் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை!

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

கதறல்ஸ் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் ’கதறல்ஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகிறது.

நடிகை சரிதா பிறந்தநாள் இன்று!

இயக்குனர் பாலச்சந்தரா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிப்பின் நாயகி சரிதா பிறந்தநாள் இன்று.

கனடா – அயர்லாந்து மோதல்!

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகின்ற ஆட்டத்தில் கனடா – அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மாங்காய் அடை

டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி… அண்ணாமலைக்கு எதிராக வெடிக்கும் தமிழிசை- அமித் ஷா கொடுத்த சிக்னல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share