டாப் 10 நியூஸ் : திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு முதல் ஆஸ்திரேலிய ஓபன் துவக்கம் வரை!

Published On:

| By christopher

திமுக கூட்டணி வேட்பாளர் யார்?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

அதிமுக போராட்டம் அறிவிப்பு!

அண்ணா பல்கலை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை திசை திருப்பும் வகையில் அறிக்கை வெளியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக மகளிர் அணியின் சார்பில் இன்று (ஜனவரி 11) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இன்று சம்பவம் செய்யுமா இஸ்ரோ?

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்ட நிலையில் ஸ்பேஸ்டெக்ஸ் செயற்கைகோள்கள் இணைப்பு இன்று காலை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலி நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெரு வழிப்பாதையில் அனுமதி இல்லை!

பெரு வழிப்பாதையில் இன்று முதல் ஜனவரி 14 வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சதுரகிரி மலையேற அனுமதி!

இன்று முதல் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வரை சதுரகிரி மலையேறி சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ராணுவ கண்காட்சி!

ராணுவ துறை சார்பில் பெங்களூரு மானக் ஷா மைதானத்தில் இன்று ராணுவ கண்காட்சி நடக்கிறது. காலை 8:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை நடக்கும் கண்காட்சியை கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைக்கிறார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் துவக்கம்!

இந்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் இன்று துவங்குகிறது.

வீர தீர சூரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

சித்தா’ பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ பாகம் 2 படத்தின் முதல் பாடலான கள்ளூரம் இன்று வெளியாக உள்ளது.

5 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சால்டட் கேரமல் பொங்கல்

ஒரே அசிங்கமா போச்சு… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் சிக்னல்… போலீஸ் ஸ்கெட்ச் ரெடி… சீமான் கைது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share